அமெரிக்கவின் புதிய அதிபராக அன்மையில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. டிரம்ப், பெங்களுர் தமிழ் தொழில் அதிபரும், மதிப்பு மிக்க நமது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினரான முனைவர் திரு. ஆரோகியசாமி கிரிகோரி அசோக்-கிற்கு வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் விருந்தளிக்க உள்ளார்.
அமெரிக்க அதிபரும், காங்கிரசும் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் 140க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பு மிக்க நபர்களுக்கு அமெரிக்காவில் விருந்தளிப்பது வழக்கம். அவ்வகையில் 65வது சந்திப்பு வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை வாசிங்டன் நகரில் உள்ள வாசிங்டன் ஹில்டன் என்னுமிடத்தில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பை, பன்னாட்டு உறவுகள் அழமாக வளரவும், மேம்பாடு அடையவும், வேற்றுமைகளை களைய செய்யவும் ஆண்டுதோறும் நடத்தப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க உலக சந்திப்புக்கு பெங்களூர் தமிழ் தொழில் அதிபரும், நமது உலகத் தமிழர் பேரவையின் மதிப்பு மிக்க உறுப்பினரான முனைவர் திரு. ஆரோகியசாமி கிரிகோரி அசோக்-கிற்கு வழங்கப்படுவது குறித்து பெருமை கொள்கிறது. ஏற்கெனவே பல்வேறு விருதுகளை பெற்று சிறப்படைந்து வரும், அவருக்கு சென்னையில் வருங்காலத்தில் ஒரு சிறப்பான பாராட்டு விழா-வை நமது உலகத் தமிழர் பேரவை நடத்தும் என உறுதியளித்து, அவரது அமெரிக்க விருந்து பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என மனதார பாராட்டுகிறோம்.
Pingback: tamilselvan
Pingback: jalaldeen