தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கல்வெட்டு ஒன்று, அழிவடையும் நிலையில் இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
இலங்கையின் புராதன மன்னர்களுக்கும், தமிழகத்தின் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த ராஜதந்திர தொடர்புகளைக் குறிக்கும் கல்வெட்டு அழிவடையும் ஆபத்தில் உள்ளது.
பல்லவ மன்னரான இரண்டாம் நந்திவர்மனின் ஆட்சி காலத்தில், 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும், துர்க்கை அம்மன் சிலை ஒன்றும் அழியும் நிலையில் உள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தமிழகம், செங்கல்பட்டு, ஒழாளூரில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கல்வெட்டும், கற்சிலையும், சில வருடங்களுக்கு முன்னர் கட்டுமானப் பணியின் போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கல்வெட்டில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பல்லவர் கால ராஜதந்திர மற்றும் நிர்வாக ரீதியான தொடர்புகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மேலும், கி.பி 720 – 796 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில், இந்த காலப் பகுதியில் தமிழகத்துக்கு பயணம் செய்த இலங்கையின் ராஜதந்திரி தொடர்பான விபரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டையும், சிலையையும் பாதுகாக்குமாறு மரபுரிமை செயற்பாட்டாளர்களால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், இந்திய தொல்லியலாளர்களால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.