கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் – டிசம்பர் 22, 1887!

சீனிவாச இராமானுஜன், டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920 இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசய்யங்கார். தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுஜனின் தந்தையாரும், தந்தை வழிப்பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தாளராக பணியாற்றி வந்தனர். தாய்வழி பாட்டனாரும் ஈரோட்டு முன்சீப் அறமன்றத்தில் அமீனாக வேலைபார்த்தவர். ஆகவே, இவர் எளிய குடும்பத்தில் ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுணர்ந்தார்.

எண்களின் பண்புகளை அறிய எண் கோட்பாடகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மீன்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர் மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>