திருப்பத்தூர் அருகே நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே உள்ள புள்ளானேரியில் நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புள்ளானேரி என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாயக்கர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு) மூன்று நடுகற்கள் மற்றும் இரண்டு சதிகற்கள் காணப்படுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

புள்ளானேரியில் உள்ள வேடியப்பன் கோயிலில் இக்கற்கள் உள்ளன. இக்கற்களை வேடியப்பன் என்ற பெயரில் இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். முதல் நடுகல் 4 அடி உயரமும் அதன் கையில் வில் அம்புடனும் காணப்படுகிறது.

இரண்டாவது நடுகல் போரிடும் கோலமின்றி, இடது கையிலுள்ள வில்லைத் தரையில் ஊன்றியும் வலது கையில் குறுவாள் ஒன்றை ஏந்தியும் பெரிய கொண்டையுடன் காட்சி தருகிறது. போர் வீரனுக்கான அடையாளத்தோடு காணப்பட்டாலும், ஆக்ரோஷமின்றிக் காட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது நடுகல் 4 அடி உயரமும் பெரிய கொண்டையுடன் இடது கையில் வில் ஒன்றையும் தாங்கியுள்ளது. இதன் வலது கையில் 3 அம்புகள் காணப்படுகின்றன. இந்த வீரனின் வில்லாற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. அதாவது வில்லில் ஒரு அம்பை விடாமல் மூன்று அம்புகளை ஒரே நேரத்தில் ஏவும் திறன் கொண்ட வீரனாக அவர் இருந்திருக்கலாம்.

மூன்று அம்புகளை ஒன்றாக சித்திரித்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த வில் ஆற்றல் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரியை வல்வில் ஓரி என்று சங்கப் பாடல்கள் புகழ்கின்றன. அதாவது, வில்லாற்றலில் சிறந்தவர் என்பது இதன் பொருள். இதை நினைவுகூரும் வகையில் இந்த நடுகல்லின் தோற்றம் உள்ளது.

மேலும், இரண்டு பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கான அடையாளத்தோடு காணப்படுகின்றனர். வீரர்கள் இறந்தவுடன் அவர்களுடன் உயிர்துறந்த மனைவிமார்கள் ஆவர். அவர்களை வேடியம்மாள் என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை தொல்லியல் துறை பராமரித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>