செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் ரூ. 5,000 ரூபாயை அப்போது இந்தியா போக உள்ள காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம் கொடுக்கவில்லை. மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்த சிதம்பரனாருக்கு அப்பணம் பெரிதும் தேவைப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பல கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து பயனில்லை. 1912ல் கொடுக்கப்பட்ட அத்தொகை 1920 வரை கொடுக்கப்படவேயில்லை. வெறுத்துப்போன வ.உ.சி, திலகரிடம் முறையிட்டுவிட்டு, காந்தியின் குஜராத் சபர்மதி அசிரமம் சென்றார். ஏற்கெனவே திலகரின் அழுத்தமிருந்தால், தவிர்க்க இயலாத காந்தியும், பணத்தை பம்பாய் சென்று தனது இஸ்லாமிய நண்பரிடம் பெற்றுக் கொள்ளலாம் என பம்பாய் முகவரி கொடுக்கிறார் அலைய விடுகிறார். பம்பாய் சென்று காந்தியின் நண்பரிடம் கேட்ட போது, இவ்வளவு பணம்தான் காந்தி தன்னிடம் கொடுக்கச் சொன்னார் என ரூ. 5,000-தில் பாதியை மட்டும் கையளிக்கப்பட்டது. இனி இவர்களிடம் பணத்திற்காக கெஞ்சுவதில்லை என நினைத்து வ.உ.சி, தமிழகம் திரும்பினார். இதுவே காந்தி கணக்கு. பொய் சொல்லாத காந்தி தனது சுய சரித்திரத்தில் இதுபற்றிய ஒரு குறிப்பும் இதுபற்றி எழுதவில்லை என்பது முக்கியம்.
வேதியன் பிள்ளை-க்கும் வ.உ.சி-யிக்கு இருந்த நெருக்கம்…
சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது 1908இல் வ.உ.சி. அவர்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றியும், அதனால் அவர் குடும்பம் அல்லல் படுவதைப் பற்றியும் செய்தித் தாளில் படித்தார் வேதியன் பிள்ளை உடனே அந்தக் குடும்பத்திற்கு ரூ.2000/- அனுப்பி வைத்துடன் வ.உ.சி. விடுதலை ஆகிவரும் வரை மாதந்தவறாமல் மீனாட்சி அம்மையாருக்கு (வ.உ.சி.யின் மனைவி) ரூ.50/- அனுப்பி வந்தார். இவ்வாறு அவர் அனுப்பியது ஆறு வருடங்களாகும். தென்னாப்பிரிக்காவில் இருந்து யார் இப்படி பணம் அனுப்புகின்றார்கள் என்று தீகைத்தனர் மீனாட்சியம்மை குடும்பத்தார். வ.உ.சி. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அந்தக் குழந்தைக்கு வேதியன் பிள்ளை நினைவாக “வேதவல்லி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
வேதியம் பிள்ளை:
தமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேலைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர். இவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு.
பாரிஸ்டர் பட்ட மேற்படிப்பை முடித்த காந்தி, தென் ஆப்பிரிக்காவுக்கு வேலை நிமித்தம் சென்றார். அங்கு வெள்ளையரை எதிர்த்தும், இந்திய சுதந்திரத்திற்கும் உழைத்து வந்துள்ளார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட, வேதியம் பிள்ளை அவர்கள், தென் ஆப்பிரிக்காவில் காந்தியிடம் நெருக்கமானார். அப்போது, திருக்குறளில் தேர்ச்சி பெற்றிருந்த, வேதியம் பிள்ளை அவர்கள், அவ்வப்போது, திருக்குறளை காந்திக்கு மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குறலின் மேன்மையை உணர்ந்த காந்தி, தமிழை படிக்க விரும்பினார். அதற்காக, திரு. வேதியம் பிள்ளையிடம் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். வேதியம் பிள்ளை அவர்களும், நேரம் வாய்க்கும் போதெல்லாம், காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழில் கையெழுத்திடும் வரை காந்தியவர்கள், தமிழை கற்றுக் கொண்டார்.
செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், சிறையில் தள்ளப்பட்டதால், அவரது குடும்பம் அன்றாட உணவுக்கே சிரமத்தை எதிர் கொண்டது. இதை தென் ஆப்பிரிக்காவில் இருந்த வேதியம் பிள்ளை அவர்கள், மாதா மாதம் ரூ. 50 தவறாமல், ஆறு வருடங்கள், வ.உ. சிதம்பரனார் சிறையிலிருந்து வெளிவரும் வரை கொடுத்து உதவினார். நன்றிக் கடனாக, சிதம்பரனாரும், தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், இவரது பெயரை சூட்ட வேண்டும் என எண்ணினார். ஆனால், பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வேதவல்லி என பெயர் சூட்டி தனது நன்றியை தெரியப்படுத்தினார்.
வேதியம் பிள்ளை அவர்கள் தமிழின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக, தில்லையாடியில் பெண் பிள்ளைக்கான பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சுமத்தை புரிந்து கொண்டதால், மதிய உணவு கொடுத்ததால், பள்ளியில் குழந்தைகளில் வருகை பெருகிறது. திரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கு குழந்தைகள் வருவதில்லை. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை.
திரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி (எ) திரு. தென்னவன், வயது 86, ஒரு ஆண்டுக்கு முன்பு இயற்கை எய்தினார். சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், எளிமையாக குடும்பம் நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com