கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வுப் பணியில் எழுத்தாணிகள் கிடைத்து வருகின்றன. இதனால் கல்வி முறை அதிகப்படியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் அகழ்வாராய்ச்சியின்போது கடந்த ஜூன் 25-ம் தேதி தொன்மை மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டை சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டன.

அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுச்சுவர், 5 அடி உயரம் கொண்ட உறை கிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொன்மையான பொருள்களும் கிடைத்துள்ளன. அதைத் தொடர்ந்து கீழடியில் எலும்புகள் கிடைத்துள்ளன. இவை அப்போதைய காலகட்டத்தில் வளர்க்கப்பட செல்லப் பிராணிகள் அல்லது மனிதர்களின் எலும்புகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் எலும்புகளான எழுத்தாணிகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் அப்போதைய காலகட்டங்களில் கல்வி அறிவு இருந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. கிடைத்த எழுத்தாணி எலும்புகள் மூலம் செய்யப்பட்டு தீயில் வாட்டி, பக்குவப்படுத்தி பேனா போன்று செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் முழுமையான அகழாய்வுக்குப் பின்புதான் உண்மைகள் தெரியவரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>