சிந்தகம்பள்ளி அருகே உள்ள மூலக்கொல்லையில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, அரிய வகை பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி அருகே மூலக்கொல்லை என்ற இடத்தில், குழந்தை பிறப்பு, சாமியாடிகளின் சடங்கு முறையை காட்டும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஓவியம், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். குழந்தை பிறப்பு பற்றிய, புதிர் புலப்படாத நிலையில், அறிவு வளர வளர கருமுட்டை, விந்து, கருப்பை ஆகியன குழந்தை உருவாக காரணம் என்பதை அறிந்து கொண்டனர். மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள், குறைகள் கெட்ட ஆவிகளால் உருவாகின்றன என்றும், அவற்றை குணமாக்க உருவாக்கப்பட்டவர்கள் தான் சாமியாடிகள். பாறை செதுக்கு என்ற வகையில் யோனியோடு கருப்பை, கரு முட்டையை குறிக்கும் வட்டம், விந்துக்களை குறிக்க நேர்க்கோடுகள் ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. கருப்பை பகுதியில், இரு குழந்தைகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளனர். கரு முட்டையிலும், விந்துக்களிலும் சாமியாடிகள் வழிபாட்டை நிகழ்த்துகின்றனர்.