கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன.
தாழியின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பிடித்தமான உணவுப் பயன்படுத்தப்பட்ட சிறிய வகை கருப்பு, சிவப்பு மட்கலன்களின் உடைந்த பாகங்கள் இருந்தன. பானை ஓட்டின் கழுத்துப் பகுதியில் கீறல் குறியீடு இருந்தது. இந்த குறியீடுகள் படிப்படியாக வளர்ந்து தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை எட்டியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.