திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பாடியூர் கிராமத்தில் உள்ள மணல் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில் சங்க கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மணல் மேட்டிலிருந்து மீண்டும் ஒரு தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஏழு ஜென்மங்கள் தான் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், பாணையின் ஒரு பகுதியில் 7 கோடுகள் வரையப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.