2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் நாகமுகுந்தன்குடி அருகே கக்குளத்து கண்மாயை துார்வாரும் போது, கழுங்கு பகுதியில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் மாடுகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் பழுப்பு, சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடு பானை ஓடுகள், பளபளப்பு ஓடுகள், தாங்கிகள், சிறுசட்டி, மூடிகள், பெண்கள் விளையாடும் ஓட்டு சில்லுகள், அணிகலன்கள், உடைந்த தாழி ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதை ஆய்வு செய்த கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி தமிழ் பேராசிரியர் ராஜேந்திரன் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகமே, தொன்மையான நகர நாகரிகம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக சிவகங்கையை சுற்றி பல இடங்களில் தொல்லியல் பொருட்கள் காணப்படுகின்றன. அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், அழகன்குளம், கீழடி, ஆதிச்சநல்லுார் கிடைத்த பொருட்களில் சில கக்குளத்து கண்மாயில் காணப்படுகின்றன.

மனித, விலங்குகளின் எலும்புகளும் காணப்படுகின்றன. இவை 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>