திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். யான் ஓயா நீர் திசை திருப்பும் திட்ட நடவடிக்கையின் போதே இக்கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதே பிரதேசத்தில் பல தொல்பொருட்களையும் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டு பிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை அங்கிருந்து அகழ்ந்தெடுத்து யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொட்டிருக்கும் களஞ்சியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் யான் ஓயா நீர் திசை திருப்பும் நடவடிக்கையின் மூலம் கல்லறைப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகின்றது.