திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு  கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தனர். கோயில் முன்மண்டபத் தூணில் கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டது.

கல்வெட்டில் இடம்பெற்ற திருமகள் புணர என்று துவங்கும் மெய்கீர்த்தி பராக்கிரம பாண்டியனுக்கு உரியது. இதுபோன்ற கல்வெட்டு விக்கிரமங்கலத்திலும் காணப்படுகிறது. பராக்கிரம பாண்டியன் மற்றும் முதலாம் குலோத்துங்கச் சோழனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள். பராக்கிரம பாண்டியன், கேரளசிங்க வளநாடு காரையூர் கோயிலுக்கு மணற்குடியில் தானமாக கொடுத்த நிலத்தின் எல்லைகள் இக்கல்வெட்டில் உள்ளது. மேலும் இக்கோயில் கருவறை யில் தெற்குப்புற குமுதத்திலும், ஜகதியிலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 1216-38 காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>