உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை  கண்டுபிடிப்பு!

உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் வரலாற்று சிறப்புமிக்கவை. சோழர்கள் காலத்தில் குடவோலை முறையில் கிராம நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி உத்திரமேரூரை ஆட்சி செய்ததை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். அதுபோல் ‘வைரமேக தடாகம்’ என்னும் ஏரியைத் தூர்வாரி பராமரித்தது, ஏரிக்கு வாரியம் அமைத்து அதிலிருந்து நீர்ப் பாசன முறைகளை மேற்கொண்டதும் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சமீபகாலங்களாக அப்பகுதியில் புதிய கல்வெட்டுகள், கற்சிலைகள் ஆகியவை கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன.

தற்போது உத்திரமேரூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால சோழர்களால் வழிபட்ட பிரம்மசாஸ்தா என்னும் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் பகுதியில் தொடர்ந்து கல்வெட்டுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூரியன் சிலை, 13 மற்றும் 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டம் ஆகிய சிலைகள் சமீப காலத்தில் இப்பகுதியில் கிடைத்திருக்கின்றன. நல்லூர் பகுதியில் சிவலிங்கம், நந்தி, முருகன் ஆகிய சிலைகள் சில தினங்களுக்கு முன் கிடைத்திருக்கின்றன. இதில் கிடைத்த முருகன் சிலை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மசாஸ்தா சிலை என ஓய்வு பெற்ற தொல்லியல்துறை பேராசிரியர் மார்க்சிய காந்தி தெரிவித்திருக்கிறார். நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் முருகன் காட்சியளிக்கிறார். மார்பிலும் இடையிலும் ஆபரணங்கள் இருக்கின்றன. இவ்வகை முருகன் பல்லவர்கள் காலத்திலும், முற்கால சோழர்கள் காலத்திலும் காஞ்சிபுரம் (தொண்டை மண்டலம்) பகுதியில் காணப்படுகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>