11ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றில் சோழர் யுத்தம் பற்றிய குறிப்புகள்! – தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள சீன புத்தகத்தில் சோழ வம்சத்தை பற்றிய தகவல்கள் இருக்கிறது என தமிழ் பேசும் சீனப் பெண் பேசினார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தேவநேயபாவாணர் அரங்கத்தில் உலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள, “சந்திக்கும் தமிழர் உலகம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு அக்னி சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இதில் சிறப்பு விருந்தினராக சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்) கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட் அதிபரும், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவருமான திரு. அபூபக்கர், தமிழன் தொலைக்காட்சி தலைவர் – நிறுவனர் திரு. கலைக்கோட்டுதயம் மற்றும் திரைப்பட நடிகை செல்வி கஸ்தூரி, மேனாள் ரஷ்ய தூதரக உயரதிகாரி திரு. USSR நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழா தொடக்கத்தில் தமிழிசையான பறை இசை கலைஞர்களின் நிகழ்ச்சி பின் சீனப் பெண்மணி நிறைமதி, திருமிகு. பாக்கிலட்சுமி, மனித உரிமைப் போராளி திருமிகு. கல்பனா, தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் ஜோதிலட்சுமி, திருமிகு. சுமத்திரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஆரம்பத்தில் காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகத் தமிழர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து சீனப் பெண்மணி நிறைமதி கிகி ஜாம் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது:

தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

11வது நூற்றாண்டில் சீனாவில் எழுதியுள்ள புத்தகத்தில் சோழர் வம்சத்தை பற்றி எழுதப்பட்டிருப்பதை பார்த்தால் இந்த நாட்டில் போர் நடந்தபோது யானைகள் பயன்படுத்தப்பட்டதும், பெரிய பெட்டிகளை யானை மீது ஏற்றி வரப்பட்டதும், தொலைதூரத்தில் இருந்து அம்பு எறியப்பட்டதும், ஈட்டியால் தாக்கி போர் தொடுத்தனர் என பல்வேறு தகவல்கள் சீனாவில் உள்ள பண்டைய கால நூல்களில் இருக்கிறது.

தமிழ் மொழி தான் செம்மொழி – தமிழ் மொழியை என்னுடைய மாணவர்களுக்கு காணொளி மூலமாக காண்பித்து தமிழ் மொழியை கற்று, கற்பித்து வருகிறேன்.

தமிழ் பேசும் போது நான் பேசுகிற சில விஷயங்கள் மற்றவர்களுக்கு புரிவதில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது எனக்கு உள்ளது.

தமிழுக்கும் சீனமொழிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தமிழை கற்பதற்கு வாயில் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொண்டு தமிழ் பேச முயற்சி செய்து பார்த்தேன்.

தமிழில் 247 எழுத்துக்களை பார்த்தவுடன் என்னுடைய மாணவர்கள் மிகவும் பயந்து போனார்கள். தமிழ் மொழியில் உள்ள விகுதி சொற்கள், இலக்கணங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் என்னுடைய மாணவர்கள் தமிழ் மொழியை பொறுமையுடன் படிக்கிறார்கள். அதுதான் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் விழா கொண்டாடினோம். நானும் என்னுடைய மாணவர்களும் சேர்ந்து, தமிழர் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ளும் போது எங்களுடைய மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதை நாங்கள் காணொளி மூலமாகவும் பகிர்ந்தோம்.

தமிழ்மொழியானது பூக்கின்ற மலர் போன்று இருக்கிறது. தமிழ் மொழியை கேட்பது இசையை கேட்பது போன்று இருக்கிறது.

எதிர்காலத்தில் சீனாவில் தமிழுக்கென ஆராய்ச்சி மையம் கட்ட வேண்டும். அதற்ககு தமிழக அரசு உதவ வேண்டும்.

சிலர் தமிழ் பேசும் போது ஆங்கிலத்தையும் சேர்த்து பேசுகிறார்கள். அதுபோல் சீனாவில் மக்கள் பேசினால் அதை விமர்சிப்பார்கள். அதனால் தமிழ் மொழியுடன் ஆங்கில மொழியை பயன்படுத்த கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் மொழி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைய வேண்டும். அடுத்த முறை நான் பேசும்போது தமிழ் மொழியை நான் இன்னும் நன்றாக பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள
தொடர்பு ரொம்ப குறைவு தான். ஆனாலும் தமிழ் மொழியை பயிற்று, இரு நாடுகளுக்கு இடையே நட்பு வளர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் காந்தளக உரிமையாளர் தமிழார்வலர் மறபின்புலவு சச்சிதானந்தம், தமிழர் எழுர்ச்சி ஆசிரியர் அரு. கோபால், மமுததுபெரரும் திராவிட இயக்க மமுன்னோடி மீண்டும் கவிக்கொண்டல் ஆசிரியர் திரு. செங்குட்டுவன், தமிழ்ப் பணி ஆசிரியர் திருவள்ளுவர், லண்டன் தமிழ் இருக்கை இந்திய பொறுப்பாளர் கனக தர்சினி, திரு. தமிழ் மகன், எழுத்தாளர் மெய்ஞ◌ானி பிரபாகரபாபு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளர் திரு. வே.கோபிநாத், அரக்கோணம் சீ.மோகன் மற்றும் அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்கள் பங்கெடுத்து சிறப்பித்தனர்.

தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் ஜோதிலட்சுமி 4கூட்டத்தை நெறிப்படுத்தினார். உலகத்தமிழர் பேரவையின் தலைமை அலுவலக செயற்பாட்டாளர் செல்வி வாசசுகி விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தார். விழா முடிவில் உலகத்தமிழர் பேரவை மாநில மகளிர் அமைப்பாளர் தஞ்சை பத்மா நன்றியுரையாற்றினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>