ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

ஆறாம் வகுப்பு மாணவருக்கு சதுரங்க விளையாட்டில் (செஸ்) மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

ஆறாம் வகுப்பு மாணவருக்கு சதுரங்க விளையாட்டில் (செஸ்) மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

சென்னயைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர், மூன்று சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச, இரண்டாவது, சிறு வயது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார்.

சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி, பிரான்ஸ் நாட்டில், மார்ச் 5-ல் துவங்கி, 14ம் தேதி முடிவடைந்தது. இதில், 36 நாடுகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். சென்னை, கெரட்டூரைச் சேர்ந்த, அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவரான, டி. குகேஷ், இந்த போட்டியில் பங்கேற்றார். ஆறாம் வகுப்பு படித்து வரும் அவர், சர்வதேச பட்டத்தை கைப்பற்றினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இதுவரை, மலேசியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில் நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டத்தை, குகேஷ் வென்றுள்ளார். இதனால், குகேஷுக்கு, சர்வதேச இரண்டாவது சிறுவயது மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது. மூன்று முறை பட்டம் வென்ற குகேஷ், இன்னும் ஒன்பது மாதங்களில், சர்வதேச இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற உள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>