போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று (23.03.2017) நிறைவேற்றபட்டது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம் பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் மீது சற்று முன்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த தீர்மானத்தை அமுல் படுத்துவதற்கு 2 ஆண்டு கால அவகாசம் வழங்கும் வகையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது. யாரும் வாக்கெடுப்பு நடத்தக் கேட்காததால், இந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
Pingback: சிங்கப்பூர் சிந்தனையாளன்