அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி!

அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது - இலங்கை ராணுவ தளபதி!

அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி!

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கடந்த 2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா நகரில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம்.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>