ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், “நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல்வேறு தமிழ் தரப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், லைக்கா தயாரிக்கும், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஈழத் தமிழரான சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் படத்திற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.

இதுகுறித்த பதில் தெரிவித்துள்ள ரஜினி, எனது நண்பர்கள், தன்னை தொடர்பு கொண்டு அரசியல் சூழ்நிலைகளை விவரித்தினால், இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கூறிய காரணங்களை என்னால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன்.

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!

மேலும் எனது பயணத்தை இலங்கையில் புனிதப்போர் செய்த மக்களை காணும் நோக்கத்தில் செல்ல இருந்தேன். அதே நேரத்தில் கடலில் மீன்பிடிக்கும் எனது மீனவ சகோதரர்களுடைய உயிர்ப்பிரச்சனை குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசேனவுடன் பேச இருந்ததாவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் அரசியல்வாதி அல்ல, நான் ஒரு கலைஞன், மக்களை மகிழ்விப்பது என்னுடைய கடமை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களை மகிழ வைத்து, அந்த புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால், தயவு செய்து அதனை அரசியலாக்க வேண்டாம் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>