மலேசியத் தொண்டு நிறுவனம் 150 மில்லியன் நிதியில் வடக்கு மாகாண மருத்துவமனைகளின் வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்!

மலேசியத் தொண்டு நிறுவனம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்!

மலேசியத் தொண்டு நிறுவனம் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்!

மலேசியத் தொண்டு நிறுவனத்தின் 150 மில்லியன் நிதியுதவியில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் விபரம் தெரிவிக்கையில், மலேசியாவில் இயங்கும் ஓர் தொண்டு நிறுவனத்தின் 150 மில்லியன் நிதியுதவியில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் நோயாளர் காவு வண்டிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கில் இயங்கும் மருத்துவமனைகளின் பயன்பாட்டில் தற்போது 100 வரையான நோயாளர் காவு வண்டிகள் உள்ளன. இவற்றினில் அண்மையில் யப்பானிய அரசினால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் மட்டுமே அடிப்படை வசதிகளுடன் கானப்படுகின்றன.

ஏனையவை அனைத்தும் போதிய அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகின்றன. இதனால் இவற்றின் தரத்தினை உயர்த்துவதற்குரிய ஓர் திட்டத்தினை முன் வைத்தோம். அவற்றினை ஆராய்ந்த மலேசிய நிறுவனம் அதற்கான நிதியினை வழங்க முன் வந்துள்ளது. இதனால் குறித்த நிதியினை முறைப்படி பெறுவதற்கான அனுமதிப்புகான ஏற்பாடுகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கான மத்திய அரசின் அனுமதியுடன் பெறப்பட்டு வடக்கின் நோயாளர் காவு வண்டிகள் அனைத்தையும் நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறான அனுமதிகள் அனைத்தும் விரைவில் பெறப்பட்டு அந்த நிதிகள் கிடைக்கப் பெற்றதும் வடக்கின் 5 மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளர் காவு வண்டிகள் 150 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>