வடமாகாணத்தில் மேலும் புதிய அமைச்சர்கள்!

வடமாகாணத்தில் மேலும் புதிய அமைச்சர்கள்!

வடமாகாணத்தில் மேலும் புதிய அமைச்சர்கள்!

குழப்பங்கள் மற்றும் இழுபறிகளின் மத்தியில் வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக ஞா.குணசீலன் மற்றும் க.சிவனேசன் இருவரும் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் முன்னிலையினில் பதவியேற்றுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சில நாட்களுக்கு முன்னர் அமைச்சு பதவிகளுடன் மேலதிகமாக வர்த்தக வாணிப அமைச்சினை ஏற்றுக் கொண்டு அனந்தி சசிதரனும் போக்குவரத்து அமைச்சினை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர்.

தற்பொழுது புளொட் சார்பு உறுப்பினரான க.சிவனேசன் விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சராகவும் டெலோ சார்பு உறுப்பினரான ஞா.குணசீலன் சுகாதார அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினில் எளிமையாக பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றிருந்தது. எதிர்வரும் ஓராண்டிற்கு இவர்கள் அமைச்சு பதவியினை வகிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>