இம்மாதம் 23 – 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள, ‘2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ பற்றிய செய்தியாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள ‘மஜெஸ்ரிக் வளாகத்தில்’ (காம்பிளெக்ஸ்’)-சில் நடைபெற்றது.
திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பா. அகிலன், விழா பற்றிய விபரங்களை விவரித்தார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர் சாமிநாதன் விமலும் திரைப்பட விழாக்களின் பின்னணி – நோக்கங்கள் பற்றி விளக்கினார்.
இத்திரைப்பட விழாவில் அனைத்துத் திரைப்படங்களும் இலவசமாகவே காட்டப்படும் என்பது, முக்கியமான விடையம்.
இப்பகுதிகளில் உள்ள திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.