அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்க மருத்துவமனையை முன்னிலைக்கு கொண்டு வந்து அசத்திய இலங்கை பெண்!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள மருத்துவமனை தரவரிசையில் இலங்கை மருத்துவர் இயக்குனராக பயணியாற்றும் மருத்துவமனை முதல் இடத்தை பிடித்துள்ளது. Health South Desert Canyon Rehabilitation என்ற மருத்துவமனையே இவ்வாறு முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் இந்த வெற்றியை பெறுவதென்றால் மருத்துவமனை பல்வேறு பிரிவுகளில் வெற்றியை பதிவு செய்திருக்க வேண்டும்.

நோயாளிகளின் திருப்தி அதன் முதல் அங்கமாகும். அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, மருத்துவர்களுடன் உள்ள தொடர்பு மற்றும் ஒப்புதல் திட்டம் தொடர்பில் தரப்படுத்தல் என்பன ஆய்வில் கண்காணிக்கப்பட்டுள்ளன. ரொக் ஹில் ஹெல்த் சவுத் என்ற மருத்துவமனையில் சேவையை பெற்றவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

குறித்த மருத்துவமனையில் சுகாதார பாதுகாப்பு இன்னும் ஒரு முக்கிய காரணமாகவே கருதப்படுகின்றது. இந்த மருத்துவமனை நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற நிலையில், நோயாளிகளுக்கு உயர் மட்ட பாதுகாப்பு வழங்கி சாதாரண வாழ்க்கைக்கு செல்வதற்கான உறுதியை வழங்குகின்றது.

நோயாளிகள் குணமடைந்தவுடன் குடும்பத்துடன் தங்கள் வீடுகளுக்கு செல்ல வைப்பதே மருத்துவமனையின் இறுதி நோக்கமாகும். இலங்கை மருத்துவர் மாலிகா ஜயசூரியவின் கண்கானிப்பு மற்றும் ஆலாசனைக்கு கீழ் இயங்கும் ரொக் ஹில் மருத்துவமனைக்கு நோயாளிகளிடம் இருந்து சிறந்த பாராட்டு கிடைத்துள்ளது. மாலிகா ஜயசூரிய பேராதனை வைத்திய பீடத்தில் உருவாகிய ஒரு மருத்துவராகும். பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கண்டி மருத்துவமனையில் செயற்பட்டவர் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>