11 முன்னாள் விடுதலை புலிகள் உட்பட 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அட்டபட்டு கூறும்போது,
“இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 11,00 விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் இலங்கை ராணுவத்தில் சரணடைந்தனர். ராணுவ முகாமில் ஆங்கில மொழி மற்றும் தொழில் கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 11 பேர் உட்பட 50 தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் இலங்கை ராணுவ சீருடைகள் அணிய மாட்டார்கள், ஆனால் ஓய்வூதியம் மற்றும் பிற தொடர்புடைய நன்மைகளுக்கு உரிமை உண்டு” என்று கூறினார்.
இன்னும் பல தமிழ் இளைஞர்கள் வருங்காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணையவுள்ளதாக சுமித் அட்டபட்டு தெரிவித்தார்.
- தி இந்து