இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருந்தும் நான் வேண்டாத ஆள் தானே என்று முதலமைச்சர் சிரித்தவாறே தெரிவித்தார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை (12/05/2017) அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.
இதன் போது, இந்திய பிரதமர் மோடியுடன் இன்று நடைபெறவுள்ள சந்திப்பு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது:
”இந்திய பிரதமருடன் சந்திப்பு இம் முறை இடம் பெறவில்லை. இருப்பினும் சென்ற முறை வந்த போது என்னை சந்தித்த ஞாபகம் இருந்ததாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.
ஆனால், வெளி விவகார துறை அமைச்சின் செயலாளார் ஜெய் சங்கரிடம், வட மாகாணத்தில் மேலும் அதிகமான நிலங்களை மக்களிடம் இருந்து பெறாது தற்போது இருக்கும் விமான நிலையத்தினை பிராந்திய ரீதியில் வர்த்தக விமான நிலையமாக நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என கூறியதாக தெரிவித்தார்.
மேலும் காங்கேசன்துறை துறைமுகம் பற்றியும், தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலும் எடுத்து கூறியதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.