500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னபாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9.00 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகியது. நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியும் தமது உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்த போராட்டத்தின் போது, காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்து தருமாறு வலியுறுத்தி கடந்த 500 நாட்களாக போராட்டத்தினை முன்னெடுத்த உறவுகள் தமக்கு காணாமல் போனோர் அலுவலகம் தேவையில்லை என்றும், தாம் கடவுளை நம்பியே தமது உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினையும் நம்ப முடியாது. நாம் கடவுளை நம்பியே தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, கடவுள் தான் நீதியை வழங்க வேண்டுமென்றும், அந்த நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.

இந்த போராட்டத்தின் பின்னர் மாலை நல்லூர் ஆலயத்தில் தேங்காய் உடைத்தும், கற்பூரச் சட்டி எந்தியும் தமது போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளனர். அதேவேளை, தமிழர்களுக்கு நிரந்தரமான, சுதந்திரமான, பாதுகாப்பான தீர்வை அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெற்றுத்தர ஆணையிடுவதாகவும் காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>