23 வயது தமிழ் பெண்ணான ஷெபானி பாஸ்கர் இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித் தலைவர்.
2011-ல் உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும் வென்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான விருதை (பிளேயர் ஆஃப் தி மேட்ச்) ஷெபானி வென்றார். அப்போது அவருக்கு வயது 17.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
என்ன நடந்தது அப்போட்டியில்? ”நான் பேட்டிங்கில் 89 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருந்தேன். சேஸிங்கில் எதிரணி ஏழு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. அவர்கள் அணியின் கடைசி ஜோடி, களத்தில் இருந்தது. அப்போது 19-வது ஓவரின் கடைசி பந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி அடிக்கப்பட்டது.
எதிரணி வீரர்கள் ஒரு ரன் எடுத்துவிட முனைந்தார்கள். பந்தை கையில் எடுத்தவுடன் குறிபார்த்து எறிந்தேன். பந்து ஸ்டம்ப்பை பதம் பார்க்க நடுவர் மெதுவாக விரலைத் தூக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் எங்கள் அணி வென்றது . நான் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், பெருமையாகவும் உணர்ந்த தருணமது. பல ஆண்டுகளாக விளையாடி வந்ததுக்கும் பயிற்சி பெற்றதற்கும் பலனை அறுவடை செய்த நிமிடம் அது.
அப்போட்டியை அடுத்து என் மீது சக வீரர்களுக்கும் அணிக்கும் நம்பிக்கை உருவானது. அங்கிருந்து தொடங்கிய பயணத்தில் இப்போது கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பு கிடைத்துள்ளது” என்கிறார்.
ஷெபானி மந்தாகினி பாஸ்கர் பிறந்தது அமெரிக்காவின் சிகாகோவில். ஆனால் தனது இறுதிக் கட்ட பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்திருக்கிறார்.
பிறந்தது சிகாகோவாக இருந்தாலும் ஆரம்பகால வகுப்புகளை பல நாடுகளில் படிக்க வேண்டியிருந்தது.
17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த தமிழ் பின்புலம் கொண்ட அமெரிக்காவில் பிறந்த ஷெபானி ஆறு வருடங்களில் அந்த அணிக்கு அணித் தலைவி பொறுப்பை பெற்றுள்ளார்.