சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழில் பெயர்ப்பலகை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழில் பெயர்ப்பலகை!

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று. சில மாதங்களுக்கு முன், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்க்கிறார்கள். சம்ஸ்கிருதத்தைப் போதிக்கிறார்கள் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, “பகவத் கீதை மற்றும் சம்ஸ்கிருதம் கட்டாயப் பாடம் அல்ல, விருப்பப் பாடம்தான். ஏற்கெனவே அதிக பாடங்களைப் படித்து வரும் மாணவர்களுக்கு நாங்கள் சுமையைக் கொடுக்கவில்லை. எனவே, சம்ஸ்கிருதம் மற்றும் பகவத் கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல் விருப்பப் பாடமாகத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலாக உள்ள சிவப்புநிறக் கட்டடத்தில் COLLEGE OF ENGINEERING GUINDY என்று ஆங்கிலத்தில் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்த பெயரை, தற்போது “கிண்டி பொறியியல் கல்லூரி” என்று தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட கல்லூரியின் பெயரில் “கிண்டி பொறியியல் கல்லூரி” அதற்குக் கீழ் COLLEGE OF ENGINEERING GUINDY என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் கல்லூரி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. பலர் இதைச் சமூக வலைதளங்களில் பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘புகழ்பெற்ற நிறுவனம்’ (Institute of Eminence) என்ற நிலைக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் (University Grants Commission) பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: