பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் ,தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்த பின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.

அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் :

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920 ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936 ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.

1937 ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.

1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.

பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்”. “அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும்,சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

திரிபுரா காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும் :

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.

பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.

வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.

மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.

1952 பொது தேர்தல் :

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு :

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் – யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் – யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல் :

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.

தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

இராமநாதபுரம் கலவரம் :

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.

இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

மறுநாள் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு,தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்கள் :

வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ் (INDC – முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.

பின்னர் 1962 இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக் குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

கொள்கைகள் :

  • ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
  • தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
  • சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமில்லை ஆன்மீகத்துக்குமில்லை
  • வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
  • வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
  • தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
  • உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்
  • அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
  • யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.

ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.

அதே நேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளர் :

தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று – நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.

ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

குருபூஜை :

தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தங்க கவசம் :

தமிழக முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.

முதுகுளத்தூர் கலவரம் – மறைக்கப்பட்ட உண்மைகள்!

1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர். (ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)

சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது. அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார். காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை (இமானுவேல் சேகரனார் படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது) விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.

தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய். தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார். (முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர். கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).

அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது. அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது. தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது. இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.

நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த, நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த, காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய, காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டிய மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார். இதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சமாதான கூட்டத்தில் ‘ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது’ என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது. (இத்தனைக்கும் தேவரோடு வந்த 2 பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).

தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும், பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது. (இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை. எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக் கூறினார். தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)

நேருவின் உத்தரவின் பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ் படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப் போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது. இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும். இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.

இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை. உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.

தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்து கொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார். (ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார். ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)

எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.

கலவரமும், கொலையும் நடந்த பிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்ல வைத்தார். தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.

சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார். அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.

இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.

ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலய நுழைவு நடத்தியவர் தேவர்.

3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி, அதில் பல சாதியினரையும் நிற்க வைத்தது வரலாறு.

இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதி வெறியர் ஆவார்?

தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள். காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான். மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.

காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர். தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர். வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி, அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.

தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார். தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார். உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார். பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார். மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.

திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.

தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை. தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர். அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.

தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.

ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை

ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.

தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

பலருக்கும் தெரியாத இமானுவேல் சேகரனார் கொலை வழக்கு தேவரின் சாட்சியம் – பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை:

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.

அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்”. என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ‘இந்து’ பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். ‘இந்து’ நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.

மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். “எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்” எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்” என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.

12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, “எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது” என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து “நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்” என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.

செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.

இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.

திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.

அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.

கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.

என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.

மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.

அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.

மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.

1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.

3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.

4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.

அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப் படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.

செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?

வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. “கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது” என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.

தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.

நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், “பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்” என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.

சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.

நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்”. என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.

பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.

தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.

1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?

சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

“தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்” என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

‘தேவர் விடுதலை’ என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, “முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க” என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, “சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?” என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், “உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்” என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. “பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் பாராளுமன்றத்தை ஈர்த்தது”

அறிவுசார் தமிழர்கள், தேவர் சொன்ன மேற்கூறியவற்றை புரிந்து கொள்வர் என்பது எம் எண்ணம்.அதை தவிர்த்து வேறு ஜாதி காழ்ப்புணர்வோடு சில புண்ணாக்குகள் சமூக துவேசத்தை எழுப்பினால், அது அவர்களின் முட்டாள்தனத்தை, தான்தோன்றித் தனத்தை, ஜாதி துவேசத்தை முன்னிறுத்த மட்டுமே என்பதையும் நம்மவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

தமிழனாக உலகின் மிகப் பெரிய காரியங்களை, அறிவு சார் ஊற்றுக்களை, இலக்கியங்களை,சமூக ஒழுங்கை, வளமையான தேசத்தை, உலகம் கொள்ளையடிக்க ஆசைப்பட்ட பெற்றிருந்த நாம் இப்படி ஜாதி அடிப்படையில் பிரிந்து சண்டை இட அந்த ஆங்கிலேயனும், பிற்கால காங்கிரஸ்காரனும், பகுத்தறிவு போர்வையில் இருந்த குள்ளநரி கூட்டங்களும் தான் காரணம் . எல்லோரும் இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம், துவேசத்திற்கும் கனவாய்ப்போன கடந்த காலத்திற்காகவும் அல்ல. வாழ்க வளமுடன்!!!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: