கனடா – மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர் பேரவை நடத்திய 8 ஆவது நடை பவனியில் அண்ணளவாக 250 பேர் கலந்து கொண்டார்கள்.
நேற்று மட்டும் டொலர் 45,000 சேர்ந்தது. இலக்கு டொலர் 100,000 ஆகும்.
மட்டக்களப்பு மாவட்ட நா.உ. சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சென்ற ஆண்டு இடம்பெற்ற 7 ஆவது நடைபவனியில் சம்பூரில் 41 வீடுகள் – பெரும்பாலும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு – கட்டிக் கொடுக்க நிதி சேகரிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கழிவறை கட்டவும் நிதி சேகரிக்கப்பட்டது. இந்த பசுமாட்டுப் பண்ணைக்கு நவம்பர் மாத இறுதி வரை நிதி கொடுத்து உதவலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் பண்ணையில் நல்லின மாடுகள் வளர்க்கப்படும். தொடக்கத்தில் 10 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும்.
மேலும் இதே சமயம் பல இலட்சங்கள் செலவழித்து திரைப்பட நடிகர்களையும் பின்னணிப் பாடகர்களையும் அழைத்து வெள்ளிவிழாக் கொண்டாடிய கனடிய தமிழர் வணிகர்கள் கழகம் வடக்கிலும் கிழக்கிலும் ஏதாவது ஒரு பொருளாதார திட்டத்தை தொடக்க உதவி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களது வாழ்வாதாரங்களை நிமிர்த்த, வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த வாணிக கழகம் நினைத்துப் பார்க்கவில்லை என்பது கவலையளிக்கிறது.