தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும்  என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் பேசினார். அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழ் பரம்பரை கழகம் உருவாக்கப்படும் என கூறினார். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார். தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறினார். தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.  கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என கூறினார்.  சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என தெரிவித்தார். உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழை கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

செங்கல்பட்டு திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ.5.90 கோடியில் உள்பு உற்பத்தி செய்யப்படும்.  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும் என கூறினார். ரூ.150 கோடியில் 10 சிப்காட் தொழிற்பூங்கா மேம்படுத்தப்படும் என கூறினார். மின்னேற்றுக் கட்டமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின்வாகனக் கொள்கை வெளியிடப்படும். மின் வாகன உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின் வாகனக் கொள்கை வெளியிடப்படும். வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்ட் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்த டான்செம் உத்தேசம் செய்யப்படும். விருதுநகரில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடைப் பூங்கா உருவாக்கப்படும் என கூறினார். குமாரலிங்கபுரத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஆடைப் பூங்கா அமைக்கப்படும். கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.300 கோடியில் நகர்திறன் பூங்கா உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதன்மையான வருங்கால நகர்திறன் பூங்கா உருவாக்கப்படும்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: