”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்!

''அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்'' - யானை ராஜேந்திரன்!

”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்!

”தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான வழக்குகளில் அரசின் நடவடிக்கைகள் காலதாமதம் ஏற்படுத்துவதோடு, கோடிக்கணக்கான பணம் விரயமும் ஏற்படுகிறது. எனவே, அமெரிக்காவில் வாஷிங்டன் அரசு மியூசியத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்பியன்மாதேவி உலோக சிலையை மீட்பதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என் சொந்த முயற்சியில் இந்த சிலையை மீட்டு வருவேன்” என பொது நல வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இது குறித்து நம்மிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் பாரம்பர்யம் மிக்க பல்வேறு கோயில்களில் உள்ள கலை நயமிக்க ஐம்பொன், உலோகச் சிலைகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் திருட்டப்பட்டுள்ளது. மேலும் திருட்டு போன, தமிழக கோயில்களின் சிலைகள் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் அருங்காட்சியகத்திலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்களிலிருந்து காணாமல் போன சிலைகள் குறித்த புகார்கள் பெருமளவு இல்லாத நிலையில், வெளிநாடுகளிலிருந்து இவற்றை மீட்பதில் சிக்கல்கள் உள்ளன.

வெளிநாடுகளில் மட்டும் தற்போது 261 சிலைகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் வாஷிங்டன் அரசு மியூசியத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அற்புத செம்பியன்மாதேவி உலோக சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நாகை மாவட்டம், செம்பியன்மாதேவி கிராமத்தில் உள்ள செம்பியன்மாதேவி கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. செம்பியன்மாதேவி சிலை திருடு போனது குறித்து எந்தப் புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கப்படாத நிலையில் அந்தச் சிலையை மீட்க தற்போது நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, கடந்த மார்ச் 1-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், செயலாளர், இந்திய தொல்லியல் துறையின் இயக்குநருக்கு நான் மனு அனுப்பியுள்ளேன். அந்த மனுவில் என் சொந்த முயற்சியிலும் செலவிலும், செம்பியன்மாதேவி சிலையை மீட்டு இந்தியாவுக்கு வருவதாக உறுதியளித்து அனுமதி கோரினேன். மேலும், அந்தச் சிலையின்மீது நான் எவ்வித தனிப்பட்ட உரிமையும் கோரமாட்டேன் என உறுதியளித்திருந்தேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். கோடை விடுமுறை முடிந்ததும் அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு வழக்குகளில் அரசின் நடவடிக்கைகள் காலதாமதத்தையும் கோடிக்கான ரூபாய் விரயத்தையும் ஏற்படுத்தும் நிலையில் நான் எனது செலவில் செம்பியன்மாதேவி சிலையை மீட்டு எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளேன்” எனக் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>