திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்!

திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, திருவள்ளுவர் உருவத்தில், 1,330 திருக்குறளை எழுதியுள்ளார், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த துளசி.

நான்கரை அடி உயரமும், 133 செ.மீ., அகலமும் கொண்ட தாளில், திருவள்ளுவரின் உருவில், தலை முதல் கால் வரை திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு அதிகாரத்திற்குரிய 10 குறள்கள் எழுதப்பட்டிருக்கும். துளசி, இந்தி டியூஷன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியை. தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

துளசி கூறியதாவது: தமிழ் மீதுள்ள பற்றால், 3.5 செ.மீ., அகலம், 4.5 செ.மீ., உயரம் கொண்ட சிறிய திருக்குறள் புத்தகத்தை தயாரித்துள்ளேன். இது, 133 பக்கங்களை கொண்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அதிகாரம்; அதில், 10 குறள்கள் இடம் பெற்றிருக்கும். தவிர, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு நூலை, படம் வரைந்து அதில் எழுதியுள்ளேன். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வரைந்து, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் எழுதியுள்ளேன். தொடர்ந்து தமிழ் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்த, பல்வேறு சாதனைகள் செய்ய முயற்சித்து வருகிறேன். எனக் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: