திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன், மாணவர்களுக்கு திருக்குறளையும் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை முயற்சித்துள்ளது.
இதுவரை, எத்தனை கோயில்களில் அறநெறி வகுப்புகள் நடத்தப்படுகின்றன; எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுகின்றனர்; திருக்குறள் வகுப்புகளை நடத்த தேவையான கூடுதல் நேரம் மற்றும் தேவைப்படும் ஆசிரியர்கள் பற்றிய அறிக்கையை ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் கேட்டுள்ளோம்.முழுமையான தகவல்கள் கிடைத்ததும், ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வோம். அவர்களுக்கான ஊதியத்தை அறநிலையத் துறையே வழங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்