தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு : தமிழக அரசு!

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு : தமிழக அரசு!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசும் அரசியல் கட்சியினர், ஆன்மிகவாதிகள், தமிழுணர்வாளர்கள் எனப் பலரும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மிக அமைப்புகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், சட்டபூர்வமாக உத்தரவு பெற உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆரம்ப காலத்திலிருந்து தமிழில்தான் குடமுழுக்கு செய்யப்பட்டது என்றும், சம்ஸ்கிருதத்தில்தான் செய்யப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் வலம் வரும் சூழலில், வருகின்ற 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று சிவனடியார், சித்தர் அடியார் அமைப்புகள் வலியுறுத்தியும் பல ஊர்களில் உண்ணாவிரதம், கோரிக்கை மாநாடு போன்றவற்றை நடத்தியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதற்கு பதில் அளிக்கும்படி அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தஞ்சை பெரிய கோயில் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அவர்களிடம் அனுமதி பெறாமல் அங்கு குடமுழுக்கு நடத்துவது தவறானது. அதனால், குடமுழுக்கு நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார்

`ஆகம விதிகளின்படி சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தரப்பிலும் முறையிடப்பட்டது. அவர்களிடம், இதை மனுவாகத் தாக்கல் செய்யக் கூறிய நீதிபதிகள், அரசுத் தரப்பிலும் இன்று பதில் அளிப்பதாகக் கூறியதால், அனைத்து வழக்குகளும் இன்று விசாரணைக்கு வர உள்ளன. இந்தநிலையில், தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>