தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருப்பதை, மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை பலகலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையிலான படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. அறிவு மற்றும் திடமான கல்வி அடித்தளத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் சென்னை பல்கலைக்கழகம் நிகழ்ந்தது” என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருக்கின்றன. மேலும், தமிழக மக்களும், கல்வி நிறுவனங்களும் நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார் என அச்செய்தி விவரிக்கிறது.