ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், குலசேகரமுடையார் கோவிலில், திருடப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலையுடன், வேறு சில கோவில்களில் திருடப்பட்ட, மேலும் ஐந்து சிலைகள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில், குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து, 1982 ஜூலை 5 ல், 600 ஆண்டுகள் பழமையான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், ஸ்ரீபலி நாயகர் உட்பட, ஐந்து பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. துப்பு கிடைக்காததால், 1984-ல், ‘கண்டுபிடிக்க முடியாதவை’ என்ற பட்டியலில், இச்சிலை திருட்டு வழக்கையும் போலீசார் சேர்த்தனர். இந்த தகவல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலுக்கு தெரிய வந்தது. பின், அவரது தலைமையிலான காவலர்கள், சிலைகளை தேடும் பணியில் களமிறங்கினர்.

தீவிர விசாரணையில், குலசேகரமுடையார் கோவிலில் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள, அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது தெரிய வந்தது. சிலையை மீட்க காவலர்கள், தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். தற்போது, நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ள, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில், தமிழகத்தில் வேறு சில கோவில்களில் திருடப்பட்ட, மேலும் ஐந்து சிலைகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இது குறித்து, உயர் காவல் அதிகாரிகள் கூறியதாவது: சீர்காழி சாயனேஸ்வரர் கோவிலில், 1985-ல், பஞ்சலோகத்தாலான, நிற்கும் குழந்தை சம்பந்தர் சிலை திருடப்பட்டுள்ளது. அதேபோல, பத்ரகாளியம்மன் கோவிலில், நடனமாடும் சம்பந்தர் சிலை திருடப்பட்டு உள்ளது. இக்கோவில் எங்கு உள்ளது என, விசாரித்து வருகிறோம். மேலும், கும்பகோணம் நாகநாதேஸ்வரர் கோவிலில், ஆறுமுகம் மற்றும் நந்தி கற்சிலைகளும் திருடப்பட்டு உள்ளன. இச்சிலைகள் உட்பட, ஐந்து சிலைகள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில், இந்த சிலைகளை மீட்டு, தமிழகம் கொண்டு வருவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: