திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 10பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கையில் நடந்த போரின் போது, உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது மற்றும் பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ், தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். அதில் சிலரை திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். அப்படி மாற்றப்பட்டவர்கள், கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இங்குள்ள அகதிகள், அடிக்கடி தங்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்துப் போராட்டம் நடத்துவர். அதில் போராட்டம் நடத்திய, ஈழநேரு உள்ளிட்டவர்கள், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்கள். இங்குள்ளவர்கள், தங்கள் குடும்பத்தினரை வாரத்துக்கு ஒருமுறை சந்திக்கலாம். முகாமுக்குள் இயல்பு வாழ்க்கை வாழலாம். ஆனால் தமிழக சிறப்பு முகாம்களில் அப்படியான உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த முகாமில் உள்ள சத்யசீலன், காந்தரூபன், தயாகரன், தயானந்தன், தர்ஷன், குருவிந்தன், தாபின்பிரசாத், யோக குமார் உள்ளிட்ட 10 பேர், தங்களைக் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரியும், தங்களை விடுவிக்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், தொடர்ந்தும் இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தால் திருச்சி சிறைத்துறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.