‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!

'ரயில்வே டிக்கெட்டில் தமிழ்'- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!

‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!

தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒரு சில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியில் விவரம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, “தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கில மொழிகளுடன் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் அந்தச் சேவை அமலுக்கு வந்தது. அதன் பிறகு, இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பல மாதங்களுக்கான தொடர் முயற்சியின் காரணமாக கிடைத்த இந்த வெற்றியை தமிழன்னையின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறேன். ஏப்ரல் 23 -ம் தேதி மாதிரி ரயில் டிக்கெட்டில் என் அன்னை தமிழைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நான் செய்த மிகப் பெரிய பணி இதுவே. என்னை இப்பணியில் ஈடுபடுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ.க தேசியத் தலைவர் அமீத் ஷாவுக்கும், அரசு அதிகாரியாக இருந்த என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த சுப்பிரமணியன் சாமிக்கும் நன்றி. இந்தக் குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்-க்கும் நன்றி. நீண்ட முயற்சிக்குப் பிறகு ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் வந்தே விட்டது. முயற்சி திருவினையாகியது. தமிழகத்துக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை தருவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இதுதொடர்பாக நான் தமிழகம் வரும்போதெல்லாம், ரயில்வே உபயோகிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் தேவையை அறிந்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் ‘ என்று கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: