புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் கனவை நனவாக்கிய திறனாய்வுத் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவரை மருத்துவம் படிப்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, அவர் 5-ம் வகுப்பில் எழுதிய திறனாய்வுத் தேர்வு.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜன்- கலைச்செல்வி தம்பதியின் மகன் கவியரசன். இவர், குலபெண்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். 5-ம் வகுப்பில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றால் விரும்பும் தனியார் உண்டு- உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 வரை அரசு நிதியுதவியில் படிக்கலாம் என்பதுதான் இந்த தேர்வின் நோக்கம். கடந்த 2010-ல் நடைபெற்ற இந்த தேர்வில் கவியரசன் தேர்ச்சி பெற்றார். அப்போது, புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த ஆ.சுகந்தி யின் பரிந்துரையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 வரை கவியரசன் பயின்றார்.

இதன்மூலம் எஸ்எஸ்எல்சி தேர்வில் 497 மதிப்பெண்ணும், கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் 1,168 மதிப்பெண்களும் பெற்றார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 121 மதிப்பெண் மட்டுமே எடுத்தார். அப்போது, இவருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை. எனினும், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்ந்த இவர், எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தால் அந்தப் படிப்பைத் தொடரவில்லை.

பின்னர், ‘கல்வியாளர்கள் சங்கம்’ என்ற ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி பெற்று, நிகழாண்டு நீட் தேர்வு எழுதி 331 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்ணுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைப்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: