பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு!

 பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு!


பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது ஆனைமலை. இங்கிருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆன திகம்பரேஷ்வரர் கோயில். இங்குள்ள பெத்த நாச்சியார் அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள புதரில் மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. போரில் வீர மரணம் அடைந்தவரின் நினைவாக, அவரது வீரத்தை பேற்றும் வகையில் நடுகல் எடுக்கப்பட்டு, அக்கல்லில் வீரனின் வீரக்கதையை சிற்பமாகச் செதுக்கி வழிபடுவது பண்டைய மரபு.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த நடுகல்லில் சற்றே வித்தியாசமாக இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லை கண்டெடுத்த, ராஜபாளையம் தனியார் கல்லூரி வரலாற்று உதவிப் பேராசிரியர் பி. கந்தசாமி கூறியதாவது: நான் தற்போது ராஜபாளையத்தில் பணியில் இருந்தாலும், பொள்ளாச்சி கல்லூரி ஒன்றில் 2 ஆண்டு பணியாற்றினேன். பல்வேறு வரலாற்று ஆய்வுகள் செய்துள்ளேன்.

சத்தியமங்கலம், பவானி, ஆனைமலை, நீலகிரி மலைகள் என பலதரப்பட்ட பகுதிகளில் இதுவரை 252 நடுகற்களை கண்டெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளேன். அப்படி ஆனைமலையில் நிறைய நடுகற்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள பெருமாள்கரட்டில் பல இரும்புப் பொருட்கள் (திப்புவின் காலத்தியது), மற்றும் மூன்றடுக்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை, கோவையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நடுகற்கள் கிடைப்பது அபூர்வம். பொதுவாக நடுகற்களில் ஒரு வீரர் அல்லது இரண்டு வீரர்கள் உருவம் மட்டுமே இருக்கும். இது இரண்டு வீரர்கள், மூன்று பெண்கள், ஒரு சிறுவன் என உருவம் பொறித்து காணப்படுகிறது.

இரண்டு வீரர்கள் எதிரிகளுடன் மோதி வீரமரணம் அடைந்ததன் நினைவாகவும், அவர்கள் இறந்ததை அறிந்து அவனுடனே இரண்டு பெண்கள், அவர்களின் மகன் ஒருவன் இறந்ததன் நினைவாகவும், அவர்களை தேவலோகப் பணிப்பெண் வாழ்த்தி அழைத்துக் கொண்டு மேலோகத்துக்கு செல்வது போலவும் செதுக்கப்பட்டிருக்கிறது.

இது 16-ம் நூற்றாண்டு விஜயநகர அரசு காலத்தியதுபோல் தெரிகிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் இன்னும் பல சரித்திர செய்திகள் வெளிவரக்கூடும். இதை ஆய்வுக்கு உட்படுத்தி தொல்பொருள் துறையினர் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: