போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், மேலசூலப்புரம், கீழ சூலப்புரம் காலனிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்ட பலர் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பருவமழை தவறாமல் பெய்து குடிநீர், விவசாயம் மேம்பட வேண்டும் என்பதுடன் 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் 12 ஆயிரம் பனை விதைகள் ந ட்டு வைத்து வளர்க்க முடிவு செய்தனர்.
அதன் முதற்கட்டமாக 2022ம் ஆண்டை குறிக்கும் 2022 பனை விதைகளை சாலையோரம், அரசு புறம்போக்கு பகுதிகளிலும் நடும் பணியினை போடி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து போடி அரசு பொது மருத்துவமனை அதிகாரி டாக்டர் ரவீந்திரநாத், எஸ்ஐ வேல்மணிகண்டன் மற்றும் நூறு நாள் பெண் தொழிலாளர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன்