பாரதியார் கவிதைகளில் நாட்டுப்பற்று: நிர்மலா சீதாராமன் புகழாரம்

 ‛‛பாரதியாரின் கவிதைகள் நாட்டு பற்றை ஏற்படுத்தும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். latest tamil newsதூத்துக்குடியில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து எட்டயாபுரம் சென்று மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். மத்திய இணை அமைச்சர் முருகனும் பாரதியார் சிலைக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து, அங்கு பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், பாரதியார் தனது கையால் எழுதிய பத்திரிகை பிரதி ஆகியவற்றை பார்வையிட்டனர். பாரதியார் நினைவு மண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார். பின்னர், பாரதியாரின் மின் நூல்களையும் வெளியிட்டார்.

latest tamil newsதொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பாரதியார் கவிதை படித்தால் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். அவரது கவிதைகளை குழந்தைகள் படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி பாடங்களில் பாரதியார் கவிதைகள் சேர்க்கப்பட வேண்டும். அவரது கவிதை நாட்டுப்பற்றை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக தூத்துக்குடியில் நடந்த வங்கி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று மொபைல் ஏ.டி.எம்., சேவை மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், வங்கி சேவையில் சிறிய பிரச்னை என்றாலும் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வங்கி சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஜன்தன் வங்கிக்கணக்கு திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அரசின் சலுகைகள் வங்கி மூலம் சென்றடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி :தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: