தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது !

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது !

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது !

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் 1.89 மீ தாண்டி தங்கம் வென்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தங்கவேல் – சரோஜா தம்பதியின் மகன் மாரியப்பன், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் பாதத்தை முழுமையாக இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது, சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ) இறுதியாண்டு பயின்று வருகிறார். மாரியப்பனின் பாராலிம்பிக் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கியது.

பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்.

மாரியப்பனின் பத்மஸ்ரீ விருது குறித்த தகவல் கிடைத்ததும், அவருடைய சொந்த ஊரான பெரிய வடகம்பட்டி கிராமத்தில் உற்சாகம் கரை புரண்டோடியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: