இது குறித்து, நாகர்கோவிலைச் சேர்ந்த தியாகி வேலாயுதன் பிள்ளை மகன் பத்மகுமார் கூறியதாவது: கடந்த 2018ல் என் மூத்த மகளுக்கு இந்த கோட்டாவில் பி.எஸ்சி., வேளாண்மை படிப்புக்கு விண்ணப்பத்தேன். ‘கட் ஆப்’ மதிப்பெண்ணில் ஏற்பட்ட சிறிய வித்தியாசத்தில் வேறு ஒரு தியாகியின் பேத்திக்கு அந்த இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு வரை இந்த ஒதுக்கீடு இருந்தது.இந்த ஆண்டு, என் இரண்டாவது மகளுக்கு விண்ணப்பிக்க, அதற்கான இணையதளத்தில் சென்றபோது இந்த ஒதுக்கீட்டை காண முடியவில்லை. இதனால், வாய்ப்பு பறிபோய் விட்டது.
அரசு புதிதாக ஒதுக்கீடுவழங்கும் போது, ஏற்கனவே உள்ள ஒதுக்கீடு பாதிக்காமல் வழங்க வேண்டும். இந்த ஆண்டிலேயே தியாகிகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க ஐகோர்ட் தானாக வழக்குப்பதிவு செய்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான வசதி எங்களுக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்