தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை!

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை!

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை!

ஆவடியைச் சேர்ந்த, 16 வயது கால்பந்து வீராங்கனை, தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்று, சாதனை படைத்து வருகிறார்.

ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியம் பகுதியைச் சேர்ந்தவர், மோனிஷா, 16; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், தேசிய அளவில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும், தமிழக அணிக்காக, எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமிழக அளவில், ‘சிறந்த கோல் கீப்பர்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மகளிர் கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மோனிஷாவின் பெற்றோர், மனோகரன் – அஞ்சலிதேவி. சகோதரி, வர்ஷினி. மோனிஷாவிற்கு, 3 வயது இருக்கும் போதே, அவரது தந்தை இறந்து விட்டார். அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக இருக்கும் தாய் அஞ்சலிதேவியின் ஊக்கத்தால், கால்பந்து போட்டியில், தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். ஏப்ரலில், மஹாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான, 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், தமிழக அணி சார்பில், மோனிஷா விளையாட உள்ளார். இதற்காக, தினமும் காலையில், இரண்டு மணி நேரமும்; மாலையில் மூன்று மணி நேரமும், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மோனிஷா கூறியதாவது: நான், 6ம் வகுப்பில் இருந்து, கால்பந்து விளையாடி வருகிறேன். என் அம்மா தான், என்னை கால்பந்து விளையாடுமாறு கூறி, அதற்கான பயிற்சியிலும் சேர்த்தார். விளையாட்டில், சீனியர்களின் ஆதரவும், அரவணைப்பும் முக்கியமானது; அந்த வகையில், என் சீனியரான நிவேதா, கால்பந்து விளையாட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தருகிறார். இது என் வெற்றிக்கு, உத்வேகமாக உள்ளது. என் பயிற்சியாளர், தனலெட்சுமி, பயிற்சியின் போது, கண்டிப்புடன் நடந்து கொள்வார். அது தான், என் வெற்றிக்கு காரணம். அவர், எனக்கு தேவையான கால்பந்து உபகரணங்களில் இருந்து, அனைத்து விதத்திலும், கைமாறு கருதாது உதவி செய்து வருகிறார். இந்திய கால்பந்து அணியில் பங்கேற்று, ‘சிறந்த கோல் கீப்பராக’ சாதனை படைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், கர்நாடகாவில் நடந்த, ஓர்ஜா டேலன்ட் ஹன்ட் தேசிய கால்பந்து போட்டியில், தமிழக அணி தங்கம் வெல்ல, இவரும் காரணமாக இருந்திருக்கிறார். பூனே, மணிப்பூர், அந்தமான், டில்லி, அசாம், மேற்கு வங்கம் என, இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்த மகளிர் கால்பந்து போட்டிகளில், தமிழக வீராங்கனையாக சென்று, மோனிஷா சாதித்துள்ளார். நாளைய இந்திய கால்பந்து அணியின் சிறந்த கோல் கீப்பரான மிளிர, மோனிஷாவிற்கு, வாழ்த்துகளுடன் ஒரு பூங்கொத்து.

  • தினமலர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: