ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நட ராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையான் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நட ராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர், விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு காணாமல் போயின. இக்கோவிலின் நடராஜர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கப் படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் கூடுதல் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்துக்கு சிலை கடத் தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பிக்கள் ஆர்.ராஜாராம், வி.மலைச்சாமி, டிஎஸ்பி கதிரவன் ஆகியோர் நடராஜர் சிலையைக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நடராஜர் சிலையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையான் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், குருக்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மீட்கப்பட்ட சிலையை கோயிலில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும், அங்கு சிலைக்கு காவல் துறை சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் ஏற்கெனவே குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன், பட்டத் தரசி உலகமாதேவி சிலையை கடந்த 1.6.2018 அன்று மீட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒப்படைத்த நிலையில், கோயிலில் ஒப்படைக்கும் 2-வது சிலை கல்லி டைக்குறிச்சி நடராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட சிலைகளின் பாதுகாப்பு கருதி கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: