நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக்கோரி கோவையில் சமூக நீதிக்கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியினர் துடும்பு, பறை, கொம்பு, மேளம் உள்ளிட்ட இசைக் கருவிகளோடு போராட்டத்தில் குதித்தனர். தமிழ் மண்ணின் அடையாளங்களுள் ஒன்றான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தனர். இதற்காக அவர்கள் துடும்பு உள்ளிட்ட பல இசைக் கருவிகளை இசைத்து நடனமாடி வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
அப்போது பேசிய அவர்கள், “கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டுப்புற இசைகள் முற்றிலும் அழிந்துபோய்விடும். இதை மனதில் வைத்து தமிழக அரசு விரைவில் கலைமாமணி விருதை வழங்க முன்வர வேண்டும்.
கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் திரைக் கலைஞர்களை விருது வழங்கி கௌரவிப்பது போல நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு ஓர் உந்து சக்தி கிடைக்கும். கலைமாமணி விருது வழங்கத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தலைமைச் செயலகம் முன்பு தமிழ்நாடு முழுக்க உள்ள நாட்டுப்புற இசைக் கலைஞர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றார்கள்.