கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா!

கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா!

கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா!

கீழடி அகழாய்வுக்கான நிதியை, மத்திய தொல்லியல் துறை இன்னும் ஒதுக்காததால், அகழாய்வு, இம்மாதம் துவங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடி என்னுமிடத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில், 2014 முதல், அகழாய்வு நடந்து வந்தது. இந்நிலையில், இந்தாண்டு அகழாய்வுக்கான அனுமதி தாமதமாக வழங்கப்பட்டது. ஆய்வுக்கான நிதி உடனே கிடைத்து, மார்ச்சில் அகழாய்வு பணியை துவக்கலாம் என, அகழாய்வு குழுவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படாதது, அகழாய்வு துவங்குவதில் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘இம்மாதத்திற்குள் நிதி கிடைத்தால் நல்லது. அடுத்த நிதியாண்டு துவங்கினால், நிதி கிடைக்க தாமதமாகும்; அகழாய்வு பணிகளும் மேலும் தள்ளி போய்விடும்’ என்றனர்.

தெளிவாக படிக்க, படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும்

தெளிவாக படிக்க, படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கவும்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: