கீழடி அகழாய்வு பணி: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் கேட்குமா?

கீழடி அகழாய்வு பணி: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் கேட்குமா?

கீழடி அகழாய்வு பணி: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் கேட்குமா?

சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடர, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல், பார்லிமென்டில் ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த, 2014ல், குஜராத் மாநிலத்தில் உள்ள வாடு நகர்; ராஜஸ்தானில் உள்ள பிஞ்ஜூர்; தமிழகத்தில், கீழடி என, மூன்று இடங்களில், இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு பணியை
துவக்கியது.

இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடந்தது. தற்போது, கீழடி தவிர்த்து, மற்ற இடங்களுக்கு, இந்த ஆண்டுக்கான அகழாய்வு அனுமதியை, தொல்லியல் துறை வழங்கியுள்ளது. அகழாய்வு பணி துவங்கிய, மூன்று இடங்களில், கீழடியில் மட்டும் தான், 5,300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன; அவை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

குஜராத்தில், அகழாய்வு முடிவில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனால், குஜராத்தில், இந்த ஆண்டுக்கான ஆய்வு பணியை, பிரதமர் நேரில் சென்று துவக்கி
வைத்துள்ளார். கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் அடிப்படையில், இடைக்கால அறிக்கை தயாரிக்கும்படி, இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வாளர்கள், ‘110 ஏக்கர் கொண்ட கீழடியில், 10 சதவீத அகழாய்வு நடந்துள்ளது; அதை வைத்து அறிக்கை தயாரித்தால், வரலாறு முழுமை பெறாது; அங்கு, 10 ஆண்டுகள் அகழாய்வு செய்ய வேண்டும்’ என, தெரிவித்தனர்.

ஆனால், ‘இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே, அடுத்தகட்ட அகழாய்வு குறித்து முடிவெடுக்கப்படும்’ என, தொல்லியல் துறை கூறியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின், புதிய அகழாய்வு விதிமுறைகளில், ‘தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை, ஒரு இடத்தில் அகழாய்வு செய்யலாம்’ என, கூறப்பட்டுள்ளது. ஆனால், கீழடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது, விதிமுறைகளுக்கு முரணானதாக உள்ளது. எனவே, கீழடியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் எழுப்ப வேண்டும்.

அறிக்கை வெளியிட தடை? கடந்த, 2005ல், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் செய்யப்பட்ட அகழாய்வு அறிக்கை, இதுவரை வெளியிடப்படவில்லை. கீழடியில், அருங்காட்சியகம் அமைக்க, நிலம் தருவதாக, தமிழக தொல்லியல் துறை தெரிவித்தது. ஆனால், இந்திய தொல்லியல் துறை, தன் கருத்தை தெரிவிக்காததால், இடம் பறிபோகும் நிலை உள்ளது.

ரொமிலா தாப்பர் – வட மாநிலங்களில், அசோகர் கால வரலாற்றுக்கு முக்கிய பங்காற்றியவர், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர். இவர், கடந்த டிச., 29ல், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த வரலாற்று பேராய மாநாட்டில், கீழடி அகழாய்வு பொருட்களை பார்வையிட்டார். பின், ‘கீழடி அகழாய்வு பொருட்கள், தமிழகத்தின் மிக முக்கிய, தலைகீழான வரலாற்று சான்றுகள்; அதனால், ஆய்வு தொடர வேண்டும்’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: