சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30-ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரின் நிலத்தில் முதல் கட்டமாக, 20 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் உறை கிணறுகள், களிமண் அச்சுகள், தங்க அணிகலன்கள் கண்டறியப் பட்டன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இதையடுத்து, கணேசன் என்பவரது நிலத்தில், 13 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் காலம் அறிய ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணியை வரும், 30-ம் தேதிக்குள் முடிக்க தொல்லியல்துறை முடிவு செய்துள்ளது.